வடக்கு-கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை – ஹெல உருமய

sambanthan-tna

 

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மீதோ தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் மீதோ முஸ்லிம் மக்­க­ளுக்கு துளி­யேனும் நம்­பிக்கை கிடை­யாது.

இத­னா­லேயே வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்­லிம்கள் எதிர்க்­கின்­றனர்.

இதனால் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்­தி­யப்­ப­டாது என ஜாதிக ஹெல உறு­மய தெரி­வித்­துள்­ளது. 

இதே­வேளை, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சமஷ்டி கோரிக்­கை­யினால் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் பாதிக்­கப்­ப­டு­கி­றது என்றும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகப் பேச்­சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க தெரி­வித்தார்.

கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு மாத்­திரம் முக்­கி­யத்­துவம் கொடுப்­பதால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கு இன்­று­வ­ரையில் சிங்­கள, முஸ்லிம் மக்­களின் மனங்­களை வெற்­றிக்­கொள்ள முடி­யாது போயுள்­ளது. ஆகவே வடக்கு, கிழக்கை ஒன்­றி­ணைப்­பதும் சாத்­தி­யப்­ப­டாது.

சித்­திரை புத்­தாண்டு எமது நாட்டின் தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நாள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே உள்­ளது. ஆனால் வடக்கின் அர­சியல் வாதிகள் அந்த நல்­ல­நா­ளிலும் பிரி­வி­னை­வாத கருத்­துக்­களை வெளி­யி­டு­வதால் நாட்டில் நல்­லி­ணக்கம் பாதிக்­கப்­ப­டு­கின்­றது.

தனி­நாடு என்றால் இந்­நாட்டின் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் அச்­சப்­ப­டுவர் என்ற கார­ணத்­தினால் சமஷ்டி ஆட்சி என்ற வாச­கத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

தமிழ் மக்­களின் அர­சியல் தலை­வ­ராக மட்­டு­மல்­லாது முழு­நாட்­டி­னதும் எதிர்க்­கட்சி அந்­தஸ்த்தை பெற்­றுக்­கொண்­டுள்ள சம்­பந்தன் யுத்­தத்தின் விளை­வு­களை கண்ணில் கண்­டவர்.

இதனால் தமிழ் மக்கள் ஒரு­வித பய­னையும் அடை­ய­வில்லை என்­ப­தையும் அவர் அறிவார். அவ்­வா­றி­ருந்தும் மீண்டும் பழைய இடத்­திற்கு அவர்கள் திரும்பிச் செல்ல முற்­ப­டு­வது நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும்.

அத­னா­லேயே வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­வ­தையம் இவ்­விரு மாகா­ணங்கள் மொழி  அடிப்­ப­டையில்  தமிழ் பேசும் தனிப்­பி­ராந்­தி­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் எதிர்க்­கின்றோம்.

எவ்­வா­றா­யினும் இன்­று­வ­ரையில் சம்­பந்தன் தமிழ் மக்­க­ளுக்­கான தலை­வ­ராக மட்­டுமே செயற்­பட்­டுள்ளார்.

அதனால் இந்­நாட்டு சிங்­கள, முஸ்லிம் மக்­களின் நம்­பிக்­கையை அவரால் பெற்­றுக்­கொள்ள முடி­யாது.

அதேபோல் புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் மக்கள் ஏற்கும் வகையில் இல்­லா­விட்டால் கடி­ன­மாக எதிர்ப்போம் என எதிர்­கட்சி தலைவர் தெரி­வித்­துள்ளார்.

சிறு­பான்­மையின் அபி­லா­ஷை­களை மட்டும் மையப்­ப­டுத்­தி­ய­தாக தான் புதிய அர­சி­ய­ல­மைப்பு இருக்க வேண்டும் என்றால் அவ்வாறானதொரு அரசியலமைப்பு எமது நாட்டிற்கு அவசியம் இல்லை. 

அகவே இவ்வாறான குழப்ப நிலைகளை நாட்டிற்குள் தோற்றுவித்து தமிழ் மக்களை மீண்டும் பின்னடைவைச் சந்திக்கச் செய்ய வேண்டாம் என தமிழ் அரசியல் தலைமைகளிடத்தில் கேட்கிறோம் என்றார்.