கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றிருந்தார், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் கூட விதிக்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொல்கஹாவல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இலங்கைக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவில்லை.
சர்வதேசத்தின் முன்னணிலையில் இலங்கை தரம்தாழ்ந்து காணப்பட்டது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டி இருந்தால், இலங்கைக்கு எதிராக கட்டாயம் பொருளாதார தடைவிதிக்கப்பட்டிருக்கும்.
எனினும் நாட்டின் அதிஷ்டம் மகி்நத அரசாங்கம் தோல்வியடைந்தது என்றார்.