மகாராஷ்டிரா வறட்சி : நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.50 லட்சம் நிதியுதவி

akshay630_Fotor

 

மகாராஷ்டிராவில் உள்ள 43,000 கிராமங்களில் சுமார் 27,723 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 75 அணைகளில் 54 அணைகளில் முற்றிலுமாக நீர் வற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், பாலிவுட் நட்சத்திரங்களில் பலரும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.  நடிகர்கள் அமிர்கான், நானா படேகர் உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில அரசின் ஜல்யுக்த் ஷிவர் அபியான் எனும் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். வறட்சியால் வாடும் கிராமங்களில் நீர் நிலைகளை உருவாக்குவது, குளம் அமைப்பது போன்ற பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இதற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட 180 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அக்‌ஷய் குமார் ரூ.90 லட்சம் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.