ரஷிய ஓட்டல் டாய்லெட் ரோல் பேப்பரில் ஒபாமாவின் புகைப்படங்கள்!

gsque30585ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து சுமார் நான்காயிரம் மைல்கள் தொலைவில் உள்ளது கரஸ்னோயார்க்ஸ் நகரம். இந்த நகரில் கடந்த மாதம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பெருமைப்படுத்தும் வகையில் ’பிரசிடெண்ட் பேக்’ என்ற ஓட்டல் திறக்கப்பட்டது. 

இந்த ஓட்டலில் உள்ள உணவகத்தின் வரவேற்பறையில் விளாடிமிர் புதினின் குழந்தை பருவம் முதல், அவர் பல்வேறு சாதனைகளை புரிந்து ஜனாதிபதியாக பதவி ஏற்றது வரையிலான புகைப்பட தொகுப்பு இடம்பெற்றுள்ளன. 

இதுமட்டுமில்லாமல், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமேரூன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா,  மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மோர்கல் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 

மேலும், ரஷிய அதிபரின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு வருபவர்கள் புதினின் மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். 

ரஷியாவையும், ஜனாதிபதி புதினையும் பெருமைப்படுத்தும் வகையில் அந்த உணவகத்தின் உரிமையாளர் இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்துள்ளார். 

ஆனால், இந்த உணவகத்தின் கழிவறையில் உரிமையாளர் செய்துள்ள ஏற்பாடு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கழிவறைக்குள் நுழைந்தவுடன், கீழே தரையில் போடப்படும் ‘தரை விரிப்பு’ அமெரிக்க தேசிய கொடியில் இருக்கிறது. உணவகத்திற்கு வருபவர்கள் அதன்மீது ஏறி நிற்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 

இவை எல்லாவற்றையும்விட, கழிவறையில் உள்ள ‘டாய்லெட் பேப்பரில்’ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது, பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.