வடகொரியா 2006–ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை கண்டுகொள்ளாமல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அவ்வாறு இதுவரை 3 முறை அந்த நாடு அணுகுண்டு சோதனைகளையும், பல முறை அணு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், அதிக சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அந்த நாட்டின் ஆட்சியாளரான கிம் ஜாங் அன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த மாதம் 6-ம் தேதி புங்க்யே ரி நகரில் உள்ள அணு ஆயுத சோதனைத்தளத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. சபையும் வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகளை கொண்டுவர முன்வந்தது. தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆகவே அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
அதை பொருட்படுத்தாத வடகொரியா 5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த தயாராகிவிட்டது. அணு ஆயுதங்களை வெடித்து பரிசோதனை பார்ப்பதற்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அணு ஆயுத சோதனை வருகிற மே மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என தென் கொரியா அதிபர் பார்க் கியூன் கே தெரிவித்து உள்ளார்.
அணு ஆயுத உற்பத்திக்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் யங் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதன்மூலம் வடகொரியாவை முன்னிலைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்.