மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதித் தீர்மானம் எடுப்பார்

mahintha Maithripala_Sirise_3409801b_Fotor

 

மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதித் தீர்மானம் எடுப்பார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Mahinda-Samarasinghe323
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவம் மற்றும் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஹைட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கட்சியின் மீது கொண்ட நேசம் காரணமாக அவ்வாறு செய்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தொடர்ச்சியாக கட்சியின் ஒழுக்க விதிகளை மீறுவதற்கு ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமை ஜனாதிபதியின் பலவீனமாக கருதப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

திருந்துவதற்கு ஜனாதிபதி வழங்கிய கால அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறினால், அது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் முன்னாள் தலைவரும் கட்சியின் ஆலோசகருமான மஹிந்த ராஜபக்ஸ தொடர்பிலும் ஜனாதிபதி ஒர் தீர்மானம் எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.