பொதுமக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய வரிகளை விதிக்க அனுமதிக்கப் போவதில்லை: ஜனாதிபதி

மக்கள் மீது வரிச் சுமை திணிக்கப்படுவது அனுமதிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய அல்லது சுமையாக இருக்கக் கூடிய வகையில் வரிகளை விதிக்க தாம் பொருளியலாளர்களை அனுமதிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

maithripala
இன்றைய தினம் காலை பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் வரி அறவீடுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த போது அதற்கு ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி முதல் 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. பெறுமதி சேர் வரி உயர்த்தப்பட்டால் அது பொதுமக்களை மோசமாக பாதிக்கும் என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.