என் தலைவன் கருணையாளன்
கருணையின் பிறப்பிடம்
எம் தலைவர்
வெட்டும் முன்னர்
உணவு பகிர்வார்
ஒட்டும் முன்னமே
முறுவலாய் சிரிப்பார்
எம் தலைவர் உணர்வுகளின்
உறைவிடம்
அப்போது அவர் முகத்தில்
ஒரு சோகம்
புரையோடியிருக்கும்
வெட்டும்போது
ஆடு என்ன பாடு படுமோ
வெட்டிய பின்னர்
யார் உருசிப்பாரோ
எனும் கவலை மட்டும்
காலமாய் நீடிக்கும்
என் தலைவர்
கருணையின் இருப்பிடம்
கட்டும் போது
கயிற்றையே ஏசுவார்
வெட்டும் போது
கத்தியை குறைப்படுவார்
குழைகொத்துக் கொடுக்கையில்
கடாவையே நோக்குவார்
உணவு கொடுப்பார்
கூட்டி வைத்து
பேசிப் பேசி
உயிரையே எடுப்பார்.
தேசியப்பட்டியல் என வந்தால்
முழு தேசத்தையும் உலுக்குவார்
ஆனால்
போராளிகளுக்கு
தம் பலி தினம்
தெரியவே தெரியாது
தலைவர் திஞானம் பொருந்தியவர் இரக்கமுள்ளவர்
அவரவர் தேதியில்
திருப்பலியினை
இனிதே நிறைவேற்றுவார்.
பாலிடிக்சு இன்டாடைமன்ட் குரூப் ஆப் கம்பேனி.
தருசலம்
6000018
சக்கி இஸ்மாயில்