பாகிஸ்தான் அணியின் தெரிவாளராக இன்ஸமாம் ?

Inzamam-Ul-Haq-of-Pakistan-talks-to-the-media-about-the-death-of-Pakistan-coach-Bob-Woolm-01_Fotor

 

பாகிஸ்தான் அணியின் தெரிவாளராக இன்ஸமாம் நியமிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவராக கடமையாற்றிய இன்ஸமாம் ஹூல் ஹக், தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

ஆப்கானிஸ்தான் அணி விடுவித்தால், இன்ஸாமாமை அணியின் தெரிவாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கட்சபை அறிவித்துள்ளது.

ஒப்பந்த காலம் டிசம்பர் மாதம் வரையில் காணப்பட்ட போதிலும் இன்ஸமாமை விடுவிக்க தீர்மானித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

தேசப்பற்றுடைய நாடு என்ற ரீதியில் பாகிஸ்தானின் தேவையை அறிந்து இன்ஸமாமின் சேவையை அந்த அணிக்கு வழங்க தாம் தடையாக இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக இன்ஸமாம் பொறுப்பு ஏற்றுக் கொண்டதன் பின்னர் அணி பல வெற்றிகளை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டுவன்ரி20 போட்டித் தொடரின் சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் அணியை சுப்பர் 10 சுற்றில் வீழ்த்திய ஒரே அணி என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் தனதாக்கிக் கொண்டது.