தேசியப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி, பிரதமர் தலைமயில் விசேட கூட்டம் ?

Ranil-maithri

 

தேசியப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

புத்தாண்டின் பின்னர் விரைவில் இந்தக் கூட்டத்தை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைத் தளபதிகள் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினரும் ஏனைய தரப்பினரும் நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர், அமைச்சரவையையும் தெளிவுபடுத்த உள்ளனர்.

எவ்வாறெனினும், இந்த விசேட கூட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சோ பாதுகாப்புச் செயலாளரோ உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.