கோதபாயவின் அமெரிக்க விஜயம் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

gotabhaya-rajapakse_Fotor

 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கோரிக்கை விடுக்க உள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை தவிர்க்கும் நோக்கில் கோதபாய ராஜபக்ஸ திடீரென அமெரிக்கா பயணம் செய்துள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

விசாரணைகளை தவிர்க்கும் வகையில் கோதபாய ராஜபக்ஸ திடீரென அமெரிக்கா சென்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆணைக்குழுவின் செயலாளரின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

கோதபாய ராஜபக்ஸ, தமது அமெரிக்க விஜயம் தொடர்பில்  ஆணைக்குழுவிற்கு அறிவித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கோதபாயவின் அமெரிக்க விஜயம் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.