ஐஎஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள் லிபியாவிற்கு செல்வது அதிகரித்துள்ளது – ஓபாமா

ஈராக்கிலும் சிரியாவிலும் சமீபத்தில் சந்தித்துள்ள தோல்விகள் காரணமாக ஐஎஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள் லிபியாவிற்கு செல்வது அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா எச்சரித்துள்ளார்.

Obama2
சிஐஏயின் தலைமையகத்தில் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள ஐஎஸ் உறுப்பினர்கள் சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் செல்வதை நாங்களும் எங்களது சகாக்களும் கடினமாக்கியதை தொடர்ந்து அவர்கள் தற்போது லிபியாவிற்கு செல்ல தொடங்கியுள்ளனர்.  இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது,அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.