இலங்கையில் வருடத்தில் 25 நாள் பொதுவிடுமுறை என்ற விடயம் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது

srilanka flag

 

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் வருடத்தில் 25 நாள் பொதுவிடுமுறை என்ற விடயம் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவில் இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறை நாட்கள் வழங்கப்படுகின்றன. 

சிங்கப்பூரில் 13 நாட்களே விடுமுறை வழங்கப்படுகின்றன. 

ஜப்பானில் 17 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றன. 

தாய்லாந்தில் 19 மற்றும் 20 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றன. 

அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்களும் பொதுவிடுமுறையாகஉள்ளன. 

எனினும் இலங்கையில் மதங்களின் அடிப்படையில் இந்த விடுமுறைகள் ஓதுக்கப்பட்டுள்ளமையால்அதிக விடுமுறைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

பௌத்தர்கள் புனித நாளாக கருதும் 12 பௌர்ணமி தினங்கள், வருடம் ஒன்றில்விடுமுறையாக்கப்பட்டுள்ளன.

போர் காலத்தின் போது ஒவ்வொரு வருடமும் இலங்கையில் பல பில்லியன் டொலர்கள் செலவுஏற்பட்டது.

இதன் காரணமாக பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டது.இதனை நிவர்த்திக்கும் வகையில் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் அதிக விடுமுறையானது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றுபொருளாதாரத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.