துறைமுக நகர்த் திட்டத்தை ரத்து செய்வதாக குரல் கொடுத்த இந்த அரசாங்கமும், மீளவும் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது

Vijitha_Herath

 

துறைமுக நகர்த் திட்ட எதிர்ப்பு குறித்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜே.வி.பி. கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பில் நிர்மானிக்கப்பட உள்ள துறைமுக நகர்த் திட்டத்திற்கு தமது கட்சி எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் பாதிப்பு குறித்த அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தாது இந்த அரசாங்கம் அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

தேர்தல் மேடைகளில் துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக குரல் கொடுத்த இந்த அரசாங்கமும், மீளவும் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது.

இந்த அரசாங்கத்தைப் போன்று ஜே.வி.பி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டதல்ல.

பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா அன்று சீனாவை பொருளாதார கொலையாளி எனக் கூறியிருந்தார்.

எனினும், இன்று சீனத் திட்டங்களை நன்மை என்று பேசி வருகின்றார்.

மக்களுக்கு வேறும் பிரச்சினைகள் காணப்படும் நிலையில் துறைமுக நகருக்கு பெருந்தொகை பணம் செலவிடுவது பாரிய அநியாயமாகும் என விஜித ஹேரத் சிங்கள இணையமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.