சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கு பதிலளிக்கப்படும்

Sri-Lanka-America1-436x301

 

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டுக்காக அமெரிக்கா ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமை அறிக்கையில் இலங்கை குறித்த விடயங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் 18ம் திகதி பதிலளிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை குறித்து முழுமையாக இன்னமும் ஆராயப்படவில்லை. அறிக்கை குறித்து முழுமையாக ஆராய்ந்து பாதுகாப்புச் செயலாளருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்னர், குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

படையினர் சித்திரவதைகளை மேற்கொள்ளுதல் பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை மீது அறிக்கையில் சுமத்தப்பட்டிருந்தது.