மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா உதவும்

6F3ECC9E-719D-4DE8-9156-A3E3282B7FEE_w900_r1_s_Fotor

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் என ஜனநாயகம், மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் டொம் மாலினோவ்ஸ்கீ தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நீதியை நிலைநாட்டவும் உதவிகளை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.