தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் – ஜெர்மி கொர்பைன்

geremy corbryin labour

 

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென பிரித்தானிய தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கொர்பைன் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக விடயங்களை மேற்கொள்ளும் போது மனித உரிமை விவகாரங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் சமூகத்திற்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு தொழிற் கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயநிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்ளும் கோரிக்கை உள்ளிட்ட அனைத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.