சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் விஷேட கூட்டத் தொடர் வொஷிங்டன் நகரில் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி வரை நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
187 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதுடன் இலங்கை குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரிதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர்.
அந்த நிறுவனங்களினூடாக இலங்கை கடன் பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பதுடன், இலங்கைக்கு வந்து குழுவினரின் ஆரம்ப அனுமதியையும் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜீ – 24 நாடுகளின் கூட்டத் தொடரிலும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.