” பிச்சை வேண்டாம் நாயைப் பிடி ” – ஹக்கீமின் நிலை

rauff hakeem, hasen

 

 தனது தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக செயலாளரை திட்டம் தீட்டி மட்டம் தட்ட முயன்றதில் ஏறத்தாழ வெற்றியடைந்து விட்டதாக நினைத்திருந்த ஹகீம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு வந்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட முயன்ற செயலாளரை தடுத்து தே. ப தருவதாக வாக்களித்தார்.

 

 மூன்று முறை மற்றவர்களை போட்டியிட வைத்ததன் மூலம், மூன்று முறைக்கு மேல் பதவி கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. ஆனால் தே. ப கிடைக்காத போதும் ஹசனலி அவர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. எதிர்ப்பறிக்கை எதையும் விடவில்லை. தே . ப தருவதாக வாக்களித்து தலைவரால் ஏமாற்றப் பட்டபோது கிளர்ந்தெழுந்தவர்களையும் அடக்கி அமைதி காத்தார். அவரது செயலாளர் பதவியில், திட்டமிட்டு நயவஞ்ஞகத்தனமாக அதிகாரங்கள் பறிக்கப் பட்டபோதுதான் அவர் முதலில் வாய் திறந்தார்.

 

 அவருக்கு இவ்வளவு அநியாயங்கள் செய்வதற்கு என்ன காரணம் என்பதே தெரியாமல் போராளிகள் தே.ப சாயம் பூசி பிரச்சினையை வேறு பக்கம் திருப்பினர். தே . ப கேட்கிறார் என்று தவறாக போராளிகளை வழி நடத்தி, போராளிகள் இவ்வளவு காலமும் கட்சிக்காக நேர்மையாக உளைத்த ஹசனலி அவர்க‌ளை துரோகி என்றழைக்கும் நிலைக்கு ஆளானார்கள். ஆனால் சதி காரரை மிஞ்ஞிய சதி காரன் இறைவன் என்று அன்று ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தேன். அல்லாஹு அக்பர். இறைவன் அநியாயம் செய்யப் பட்டவனின் பக்கம் இருக்கிறான். நேற்று தேர்தல் கமிஷனரை சந்திக்க சென்ற தலைவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

 

 ஹை கொமான்டுக்கு மட்டும் புதிய செயலாளரை நியமிக்கிறோம் என்று பேராளர் மாநாட்டில் தெரிவித்துவிட்டு, தேர்தல் செயலகத்துக்கு மாற்றி கடிதம் எழுதி புது செயலாளருக்குத்தான் எல்லா அதிகாரங்களும் என்று அறிவித்ததை தேர்தல் கமிஷனர் ஏற்றுக் கொள்ளவில்லையாம். சமரசமாக போகுமாறும் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று இப்போது செயலாளருக்கு தூதனுப்புகிறாராம். தே. ப வை மீதி முழு நான்கு வருடங்களுக்கும் தருவதாக பேரம் பேசுகிறார்களாம். ஆனால் செயலாளர் மறுத்து விட்டு தே. ப தேவையில்லை பறித்தெடுக்கப் பட்ட செயலாளரின் அதிகாரங்கள் மட்டுமே வேண்டும் என்றாராம்.

 

 ஆனால் மீண்டும் பேராளர் மநாட்டை கூட்டி அதிகாரங்களை மீள அளிப்பது தலைவருக்கு கௌரவ குறைச்சலாம். செயலாளரின் கௌரவத்திற்கு வேட்டு வைக்கும் போது இதை யோசித்திருக்க வேண்டும். நயவஞ்சகத் தனத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை இது. இப்போது செயலாளருடன் சமரசமாக முடிக்காவிட்டால், கட்சிக்கு செயலாளர் இல்லாத நிலை ஏற்படும். தேர்தலொன்றின் போது சிக்கல் ஏற்படும். மு. கா வில் தேர்தல் கேட்க முடியாமல் போகும். பதவி வெறியில் தன் இஷ்டப்படி ஆடிய மகிந்தருக்கு நடந்ததையும் நினைவுப்படுத்தி இருந்தோம். இப்போது ஹகீமின் நிலையும் அதுதான்.

 

ஆஷூர் சேகு இஸ்ஸதீன்