சீனாவுக்கு துறைமுகத்தையும் மத்தள விமான நிலையத்தையும் வழங்க அரசாங்கம் இணக்கம்

ranil wick

 

இலங்கை அரசு சீனாவுக்கு செலுத்த வேண்டிய அதிகளவிலான கடன் சுமையில் இருந்து மீள அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமான நிலையத்தையும் சீனாவுக்கு வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணிப்பில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை ஏற்படுத்தவும் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவும் சீன நிறுவனங்கள் இணங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனங்களுக்காக அம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள அங்கு கைத்தொழில் வலயம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

கடன் சுமை மிகவும் அதிகமானது, அதனை செலுத்த வேண்டுமாயின் இன்னும் பல தலைமுறை வாழ்நாள் காலம் வரை செல்லும்.இதனால், அந்த கடனுடன் விமான நிலையத்தையும் துறைமுகத்தை பெற்றுக்கொள்ள சீன நிறுவனங்கள் இணங்கியுள்ளதால், அது சம்பந்தமான தேவை நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.