தெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவது தவறானது : கபில்தேவ்

col_650_022415072750_Fotor

 

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலி. சமீபகாலமாக அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

டெஸ்ட் கேப்டனான அவர் 3 நிலைகளிலும் தனது பேட்டிங் திறனை நல்ல முறையில் நிலையாக வெளிப்படுத்தி வருகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோலி ஜொலித்து வருகிறார்.

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கருடன் அவர் தற்போது ஒப்பிடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவது சரியானதல்ல என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

தெண்டுல்கரையும், விராட் கோலியையும் இப்போது ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன? எங்கிருந்து இந்த ஒப்பிடு வருகிறது. தெண்டுல்கரை பொறுத்தவரை அவர் ஒரு சகாப்தம். கோலி ஆரம்ப கட்டத்தில் விளையாடி வருகிறார்.

எனவே இருவரையும் ஒப்பிடுவது சரியானதல்ல என்றே நினைக்கிறேன்.

சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் வெற்றியை எதிர்பார்க்க முடியாது. எதிர் அணி நம்மைவிட சிறப்பாக ஆடும் போது தோல்வி அடைவது தவிர்க்க முடியாது.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் 2013–ம் ஆண்டு ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து அவர் 34,347 ரன் (டெஸ்ட் 15,921+ ஒருநாள் போட்டி 18,426) எடுத்து சாதனை புரிந்துள்ளார். 100 செஞ்சூரி (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 49) அடித்து முத்திரை பதித்து உள்ளார்.

27 வயதான விராட் கோலி 41 டெஸ்டில் விளையாடி 2,994 ரன்னும், 171 ஒருநாள் போட்டியில் 7,212 ரன்னும் எடுத்து உள்ளார்.

டெஸ்டில் 11 சதமும், ஒருநாள் போட்டியில் 25 செஞ்சூரியும் அடித்து உள்ளார்.