உயர்தரத்தில் இலவசக் கற்றலுக்கு வறிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

Erukkalampiddy School_Fotor
உயர்தரத்தில் இலவசக் கற்றலுக்கு வறிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி 2014லில் 19 மாணவர்களை பல்கலைக் கழகம் அனுப்பி மாவட்டத்தில் ஒரு சிறந்த பாடசதலையாக விழங்குகின்றது. இந்த வகையில் ஏனைய மாணவர்களுக்கும் சந்தர்ப்பங்களை வழங்கும் வகையில் 2016 / 2018 ஆம் ஆண்டுகளுக்கான உயர்தர மாணவர்களை உள்வாங்க முன்வந்துள்து.
இப்பாடசாலை விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம், காலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு பாடசாலை நிருவாகம் முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும், வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவு வசதிகள் மற்றும் விடுதி வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரியின் வரலாற்றில் இன்று வரை கல்விமான்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்துறையினர், புத்தி ஜீவிகள் என பல்வேறுபட்டவர்களையும் உருவாக்கி வரும் ஒரு பழமைவாய்ந்த பாடசாலையாகும். கடந்த 1990ஆம் ஆண்டின் இடம் பெயர்வு காரணமாக சுமார் இரண்டு தஸாப்தங்கள் கல்வி வளர்ச்சியில் சற்று வீழ்ச்சியுற்று மீண்டும் மக்கள் மீளக் குடியமர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் கல்விச் சமுகம் இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகின்றனர்.
இதன் பயனாகவே யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் குறிப்பாக 2014ஆம் ஆண்டு இந்தப்பாடசாலை மருத்துவம், பொறியியல், முகாமைத்துவம் ஆகிய துறைகளில் தலா ஒவ்வொரு மாணவர் உட்பட 19 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியதுடன் இவ்வாண்டில் மன்னார் மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் இப்பாடசாலையின் மாணவர் ஒருவர் மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 
இதேவேளை இவ்வருடம் (2015) வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில் தொழிநுட்பப் பிரிவில் உயிர் முறைமைகள் தொழிநுட்பப் பிரிவில் மாவட்டத்தின் 1ஆம், 2ஆம், 3அம், 4அம், 6ஆம், 7அம், 8ஆம், 9ஆம் நிலைகளையும், பொறியியல் தொழிநுட்பப் பிரிவில் 1ஆம், 2ஆம், 4ஆம், 5ஆம் நிலைகளையும் பெற்றதோடு அகில இலங்கை ரீதியில் உயிர் முறைமைகள் தொழிநுட்பப் பிரிவின் பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டம் 1ஆம் இடத்தினைப் பெற்றுக் கொள்ளக் காரணமாக இப்பாடசாலை விளங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தவகையில் இப்பாடசாலை தற்போது உயர்தர தொழிநுட்ப பிரிவு உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்குமான ஆளணிகளையும், தொழிநுட்ப ஆய்வுகூடங்களையும் கொண்டுள்ளதால் திறமையான மற்றும் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு புதிய மாணவர்களை அனுமதித்து அவர்களுக்கான குறிப்பாக ஆண், பெண்களுக்கான தனித்தனியான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியிருப்பதாக பாடசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.

 
இந்தவகையில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரியில் 2016 / 2018 ஆம் ஆண்டுகளுக்கான உயர்தரத்தில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் பாடசாலையின் 0232050996 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது அதிபர் எஸ். செல்வரஞ்சன்- 0718618005, 0775815998, பிரதி அதிபர் ஏ. அஸ்லம் 0718066965 அல்லது ஏ.எச். றலீப் 0713348800 ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என பாடசாலையின் பழயை மாணவர் ஏ.சி. முஸாதிக் தெரிவித்தார்.