இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு உம்முல் குரா பல்கலைக்கழகம் இணக்கம்

2222_Fotor
 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது. 
உம்முல் குரா பல்கலைகழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் தாஹா அவர்களின் தலைமையிலான குழுவினருக்கும் ஹிரா பௌண்டேசனின் தலைவரும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுக்களின் போது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 
இதற்கமைய,  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலே அமைக்கபடவிருக்கும் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை  இரண்டு மாத காலத்திற்குள் உருவாக்கி அதனை உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் அங்கிகாரத்துடன் உயர்கல்வி அமைச்சுக்கு சமர்பிப்பதற்கான முழுப் பொறுப்பையும் அது ஏற்றுக்கொண்டுள்ளது. 
குறித்த சந்திப்பில், மக்கா உம்முல் குரா பல்கலைகழகத்தின் சார்பில் பேராசியர் தாஹா,  பேராசியர் டொக்டர் பைசல் முஅல்லிம், பேராசியர் டொக்டர் அப்துர் ரஹ்மான் சுலமி, ஹிரா பௌண்டேசன்  செயலாளர் நாயகம் அஷ்செயக் மும்தாஸ் மதனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.