பொத்துவில் பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் : தவம் !

றியாஸ் இஸ்மாயில்
 கல்வியற் கல்லுரிகளில் பயிற்சி முடித்து தற்போது வெளிமாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கும் போது ஆசிரியர் பற்றாக்குறையான பொத்துவில் மற்றும் இறக்காமம் கோட்டப்பாடசாலைகளுக்கு நியமிக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார். 
கிழக்கு மாகாண முதலமைச்சரின் காரியாலயத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில் இன்று நடைபெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பான கூட்டத்தில் மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
11209623_849067071795425_5828323416475174901_n
நீண்ட காலமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பொத்துவில் கோட்டப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருக்கிறது அதே போன்று சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள இறக்காமம் கல்விக் கோட்டத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. 
தற்போது வழங்கப்படவுள்ள இந்நியமனத்தில் தேவையான ஆசிரியர்களை இரு கல்விக் கோட்டங்களிலும் நியமிக்க இச்சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதுடன் இப்பிரச்சினைகள் இந்நியமனத்துடன் முடிவுறுத்தப்பட வேண்டும் இதனை செய்யா விட்டால் இப்பிரதேச மக்களை ஒன்று திரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களை நான் முன்னின்று நடத்த வேண்டிய தேவை ஏற்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் மேலும் 
உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மாகாண சபை உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்விப்பணிப்பாளர் எனப் பலர் கலந்து கொண்டனர்.