110 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து

க.கிஷாந்தன்

IMG_0009_Fotor

 

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து களுத்துறை – அலுத்கம பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி 110 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. 

இதில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

10.04.2016 அன்று மாலை 06.30 அளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் எனவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். 

 

குறித்த லொறியின் இருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்கறி வகைகளை நானுஓயா பொலிஸாரின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அத்தோடு அதிகமான மரக்கறி வகைகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_0329_Fotor