போராளிகளின் மனதில் இழையோடும் ஓர் உண்மைதான் “ஹசன் அலி”

hasan ali slmcஅபூ ஸைனப் 
 
ள்நாட்டு மின்னணு ஊடகங்களை ஆக்கிரமித்த சமீபத்திய விடயங்கள் இரண்டு. ஒன்று “பனாமா பேப்பர்ஸ்”, மற்றையது மு.கா. செயலாளர் நாயகம் ஹசன் அலி. 
ஹசன் அலி எனும் கதாபாத்திரம் திட்டமிடப்பட்டு அகற்றப்பட்டிருக்கிறதா எனும் கேள்வி இன்னமும் துப்புத் துலங்காமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் பலரும் அவரை விமர்சித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஹசன் அலி எனும் கதாபாத்திரம் சரியானதா பிழையானதா எனும் அலசலுக்கு முன், அவரை விமர்சிக்கும் மு.கா அரசியல்வாதிகளும், போராளிகளும் நியாயமாக விமர்சிக்கின்றார்களா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை எனலாம்.
மு.கா. வுக்கென்று முகவரி ஏதும் இல்லாத காலத்தில், பதவி ஆசைகள் ஏதும் இல்லாமல் நேர்மையாக உழைத்த ஒரு கனவானைப் பார்த்து கேலி செய்கின்றவர்கள் யாரென்று பார்த்தால் மு. கா வுக்கு எதிராக அரசியல் செய்து, அது முடியாமல் போய், மு.கா வில் அரசியல் தஞ்சமடைந்த சூழ் நிலைக் கைதிகள்.
எனவே, செயலாளர் நாயகத்தின் போக்குகளையும் அவரின் கோரிக்கைககையும் தராசில் வைக்கும் முன், எமது மனச்சாட்சிகளில் எம்மை எடை போடுவோம். நாம் இந்தக் கட்சிகளில் சேர்ந்த நோக்கங்களை நம்மிடமே கேட்டுப் பார்ப்போம். நிச்சயமாக எமக்கு விடை கிடைக்கும்.
இவ்வளவு நிகழ்ச்சிகளுக்குப் பின்னரும், கட்சியில்தான் கடைசிவரை இருப்பேன் என்று செயலாளர் நாயகம் கூறியிருப்பது; குழந்தை யாருக்கு எனும் வழக்கில், குழந்தையை வெட்ட வேண்டாம், அந்தப் பெண்ணிடமே கொடுத்து விடுங்கள் என்று கூறிய நிஜத் தாயின் நிலையை உணர்த்துகிறது.
எனவே, தேசியப் பட்டியல், பதவி ஆசை போன்ற வாசகங்களுக்கு அப்பால், ‘ஹசன் அலி’ எனும் ஆணிவேரின் தியாகங்களை கருத்தில் கொள்வோம். அவருக்கு நாம் தேசியப் பட்டியல் கொடுத்தாலும் இனி அவர் ஏற்கும் மன நிலையில் இல்லை. 
நாம் கட்சியில் சேர்ந்த நோக்கத்தோடு நமது வாசகங்களை வரையறுத்துக் கொள்வோம். செயலாளர் நாயகத்தை விமர்சிப்பதை விடுத்து கட்சிப் பணிகளில் ஈடுபடுவோம்.
போராளிகளின் மனதில் இழையோடும் ஓர் உண்மைதான் “ஹசன் அலி” எனும் முஸ்லிம் காங்கிரஸ் என்பதை நேர்மையான ஒவ்வொரு போராளியும் ஏற்றுக் கொள்வர்.