ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட அட்டாளைச்சேனை கிராமிய வைத்தியசாலை

அபு அலா, ஏ.எல்.எம்.நபார்டீன் 
DSC_3876_Fotor
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் முயற்சியினால் அட்டாளைச்சேனை கிராமிய வைத்தியசாலையாக இருந்த அரச வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் வைத்தியப் பொறுப்பதிகாரி யூ.எல்.எம்.வபா தலைமையில் நேற்று இரவு (09) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அட்டாளைச்சேனைப் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.
அட்டாளைச்சேனை வைத்தியசாலை கிராமிய வைத்தியசாலையாக இயங்கிவருவதால் இப்பிரதேச மக்கள் தூர இடங்களுக்கு சிகிச்சைக்காகச் செல்ல வேண்டிய துரதிஷ்டமான நிலை பல வருடமாக இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் அதனை சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாகத் தரமுயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும் வைத்தியசாலைக்கான நுளைவாயில் அமைப்பதற்காக தனிநபர் காணி ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டன.
DSC_3886_Fotor
மேலும் குறித்த வைத்திய சாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டதால் அதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிக்க பலகோடி ரூபாய் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நஸீர் அதன்போது தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை வைத்தியசாலையை தரமுயர்த்த முழுமூச்சாய்ப் உழைத்து செயல்பட்ட சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீருக்கு அட்டாளைச்சேனை மக்கள் மனபூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.