கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் திட்டமிடல் அற்ற நடவடிக்கைகள் காரணமாக பல வருடங்களாக அரசாங்க மருத்துவமனைகளில் பல்வேறு மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த ஆண்டும் கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் அரசாங்க மருத்துவமனைகளில் ஒருசில மருந்து வகைகள் இன்மையால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதனைக் கவனத்திற் கொண்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, பூரணமாக குணமாகாத நிலையிலும் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ச்சியான திட்டமிடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அடுத்த வருடம் தொடக்கம் அரச மருத்துவமனைகளில் எந்தவொரு மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் சில நடவடிக்கைகளை தற்போது திட்டமிட்டுள்ளதாகவும், மிக விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.