முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விமான படைக்குச் சொந்தமான விமானங்களில் பயணம் செய்து பணம் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளில் பங்கேற்குமாறு பசில் ராஜபக்ஸவின் மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் நேற்றைய தினம் அவர் விசாரணைகளில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.