சர்வதேச நாணய நிதியம் மே மாதம் இலங்கைக்கு கடன் வழங்கவுள்ளது

imf_logo_Fotor 

 

சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு கடன் வழங்கவுள்ளது.  கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெறவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.  

 

 இதன்படி, எதிர்வரும் மே மாதமளவில் கடன் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  அந்நிய செலாவணி ஒதுக்கத்திற்காக இந்தக் கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.  இந்தக் கடனைத் தொடர்ந்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியனவற்றிடமிருந்தும் கடன் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  கடன் பெற்றுக்கொள்வது கடன் செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் சிறந்தகொள்கைகளை பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.