இம்போட்மிரர் ஊடகவலையமைப்பினர் நடாத்தும் மாபெரும் இலவச ஊடகச் செயலமர்வு

12321446_1593856914274392_721698110802020861_n_Fotor
இம்போட்மிரர் ஊடகவலையமைப்பின்  ஆறாவது அகவை நிகழ்வும் இலவச ஊடகச் செயலமர்வும் இம்மாதம் 24.04.2016 அன்று காலை 09.00 மணி முதல் மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி அஷ்-ஷஹீத் அல்- ஹாஜ் அகமட் லெப்பை ஞாபகார்த்த கூட்ட மண்டபத்தில் மிகவிமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்வூடக செயலமர்வில் முன்னிலை ஊடகவியலாளர்களைக் கொண்டு  விரிவுரைகள் வழங்கப்பட்டு பெறுமதியான சான்றிதல் ஊடகத்துறை அமைச்சின் கையொப்பமிட்டு வழங்கப்படவிருக்கின்றன.
எனவே இம்மாபெரும் ஊடகச் செயலமர்வில் இலங்கையின் நாலா பாகமும் இருக்கும் ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட அளவிலானவர்களே அனுமதிக்கப்படவுள்ளனர். ஆகவே இச்செயலமர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் உங்கள் விபரத்தினை எமக்கு இம்மாதம் 14.04.2016 க்கு முதல் அனுப்பி வைக்கவும். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் காகிதாதிகள், உணவு, சான்றிதல் வழங்கப்படுவதுடன் செய்தியாளர் அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்படும். (நிபந்தனைகளுடன்)
இச்செயலமர்வில் பிரசித்தி பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர்களைக் கொண்டு சிகரம் சர்வதேச அறிவிப்பாளர்களுக்கான பயிற்சியும், மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சியுமாக இரு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் விபரத்தினை அனுப்பிவைக்க இதனைக் கிளிக்பன்னவும்: