க.கிஷாந்தன்
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை பி.டபிள்யூ.டீ பிரிவு பகுதியில் மாரியம்மன் கோவில்க்கு அருகில் நின்ற ஒரு பழமையான மரம் 07.04.2016 அன்று காலை 8.30 மணியளவில் முறிந்து குறித்த கோவில் மீது விழுந்ததில் கோவில் முற்றாக சேதமடைந்துள்ளது.
06.04.2016 அன்று பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் இவ்வாறு முறிந்து கோவில் மீது விழுந்துள்ளதாக பிரதேவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு அப்பகுதியில் இருந்த 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் குறித்த மரம் மின்கம்பத்தில் விழுந்ததால் பிரதேச மின் விநியோக கம்பிகள் வீழ்ந்த நிலையில், பிரதேச மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
எனினும் அப்பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் மேற்படி வீழ்ந்த நிலையில் இருந்த மின்கம்பியை குறித்த இரண்டு பெண் தொழிலாளர்கள் தெரியாமல் தொட்டதனால் மின்சாரம் தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர்.
அதன்பின் ஏனைய தொழிலாளர்களின் உதவியோடு கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இரண்டு பெண் தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடைப்பட்ட மின்சாரத்தை மீளமைக்க அட்டன் மின்சாரசபையினர் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.