அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளை சமனிலைப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான இந்தியாவுடனும் மரபு ரீதியான நட்பு நாடுகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுடனும் சிறந்த உறவுகளை அரசாங்கம் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.இலங்கை அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவுகளைப் பேணுவதற்கு முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுடன் இணைந்து கடற் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திரத்தின் பின்னர் முதல் தடவையாக ஜனநாயகம், ஐக்கியம் மற்றும் சமாதானம் போன்றன தொடர்பான மெய்யான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.