மூளையற்றவர்கள் என்று கூறியதற்காக டேரன் சமியிடம் மன்னிப்பு கோரிய மார்க் நிக்கோலஸ்!

201604050143565146_Nicholas-apologises-to-Sammy-for-short-of-brains-comment_SECVPF
நேற்று நடைப்பெற்ற உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டிக்கு முன்னதாக மார்க் நிக்கோலஸ் எழுதிய கட்டுரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ‘மூளையற்றவர்கள் அணி” என்று தரக்குறைவாக எழுதினார். 

இது கேப்டன் டேரன் சமியை கோபப்படுத்தியது. நேற்றைய போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமி “விலங்குகளுக்கு கூட மூளை உள்ளது. கடவுள் அசிங்கமான மனிதர்களை விரும்பமாட்டார். நாங்கள் மிகவும் அழகாக படைக்கப்பட்ட மனிதர்கள்”  என்று தெரிவித்தார். மேலும் நேற்று உலகக் கோப்பையை வென்ற பிறகும் மார்க் நின்கோலசை குறிப்பிட்டு பேசினார். 

இந்நிலையில் மார்க் நிக்கோலஸ் டேரன் சமியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  

“நான் மூளையற்றவர்கள் என்ற தோனியில் நான் எழுதவில்லை, ஆனால் எனது கருத்து மிகப்பெரிய கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட அணியை அவமதிக்கும் வகையில் உள்ளது.

இதற்காக டேரன் சமியிடம் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். நான் அவர் மீது மிகப்பெரிய மதிப்பை வைத்துள்ளேன். அந்த அணியையும் நான் பெரிய அளவில் மதிப்பவன். இறுதிப் போட்டியின் முடிவு எப்படியிருந்தாலுமே நான் எனது மன்னிப்பை தெரிவிக்கவே முடிவு செய்திருந்தேன்.

மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன், வெஸ்ட் இண்டீஸ் அணி ‘மூளையற்றவர்களின் அணி’ அல்ல. என்னுடைய அந்த கட்டுரையில் ‘மூளை குறைவுதான், ஆனால் ஐ.பி.எல். அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது’ என்று எழுதிவிட்டேன். மற்றவர்கள் புரிந்து கொள்வது போல் மூளையற்றவர்கள், மூளையில்லாதவர்கள் என்கிற அர்த்தத்தில் நான் குறிப்பிடவில்லை.

எப்படியிருந்தாலும் உண்மையில் எனது கருத்திற்காக நான் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 2016, உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியை என்னால் மறக்க முடியாது, டேரன் சமியையும் நான் மறக்க மாட்டேன். சமியும் மற்ற வீரர்களும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன்” என்று மார்க் நிக்கோலஸ் தெரிவித்துள்ளார்.