ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் காலியில் நடத்தப்பட உள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இவ்வாறு காலி நகரில் மே தினப் பேரணியையும் கூட்டத்தையும் நடாத்த உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், மே தினக் கூட்டத்தை காலியில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.