அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி அழைப்பு

President , maithri

 

அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து பேதங்களையும் களைந்து அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டத்தை கைவிடுமாறும் அவர் கோரியுள்ளார்.

அரசாங்கம் தொடர்ச்சியாக இயங்காது என்ற சிலரின் கனவு ஒரு போதும் பலிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.