ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு நெருக்கமானவர்கள் சட்டவிரோத பணப் பறிமாற்றத்தில் ஈடுபடுவது இரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கிரிமியாவை ரஸ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட பின்னர் ஐரோப்பிய ஓன்றியத்தினதும்,அமெரிக்காவினதும் தடைகளுக்கு உட்பட்ட பாங்ரொசியாவை மையமாகவைத்து இந்த சட்டவிரோ நடவடிக்கைகள் இடம்பெற்றன. ரஸ்யாவிற்கு வெளியே இயங்கும் நிறுவனங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. புட்டினின் நெருங்கிய நண்பர்களிற்கு சொந்தமான இன்டர்நசனல் மீடியா ஓவர்சீஸ், சொனட்டா ஓவர்சீஸ்போன்ற நிறுவனங்களே இவ்வாறான சட்டவி ரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.