நல்லிணக்கம் என்பது பயங்கரவாதத்திற்கு இடமளிப்பது கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவிலச்சி ஸ்ரீ சம்புத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் புதிதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னதாக கட்சியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆரம்பம் முதலே கோரப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
காவல்துறை உத்தியோகத்தர்கள் உரிய முறையில் செயற்பட்டிருக்கலாவிட்டால் தற்கொலை குண்டு அங்கியை மீட்டிருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பழிவாங்கல் குரோத உணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் 2005ம் ஆண்டு தாம் பழிவாங்கல்களில் ஈடுபட்டிருந்தால் யுத்தத்தை வென்றெடுக்க முடிந்திருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்வியைத் தழுவிய சிலர் தம்மை திட்டுவதாகவும், தம்மை திட்டினால் ஆளுனர் பதவியேனும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது பயணங்களை கண்காணிக்க புலனாய்வுப் பிரிவினர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், அதே போன்று புலிகள் தொடர்பிலும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
நான்கு கிலோ நெல் விற்றே ஒரு கிலோ உப்பு வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.