பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மக்கள் காங்கிரசில் இணைவு

சுஐப் எம்.காசிம்  

12417731_574851976014185_2267008663678931506_n_Fotor

 

பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளரும், கல்விமானும் சிறந்த ஆய்வாளரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உத்தியோகப்பூர்வமாக இணைந்துகொண்டார். சாய்ந்தமருது, அல் / ஹிலால் மகா வித்தியாலயத்தில் இன்று (03/04/2016) இடம்பெற்ற, எழுத்தாளர் பீர் முகம்மத் எழுதிய “திறன்நோக்கு” என்ற நூல் வெளியீட்டு  விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் பகிரங்கமாக விடுத்தார். 

அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை வழி நடாத்தக் கூடிய சிறந்த தலைவராக அமைச்சர் ரிசாத் பதியுதீனை தான் இனங்கண்டு கொண்டதானாலேயே, இந்த முடிவை சமுதாயத்தின் நன்மைக் கருதி தாம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். 

 

12933116_574891842676865_5392386642004442324_n_Fotor

அம்பாறை மாவட்டம் மர்ஹூம் அஷ்ரபின் மறைவின் பின்னர், மு.கா தலைமை, அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு சேவையையும் ஆற்றவில்லை எனவும், மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றதெனவும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டினார். அமைச்சர் றிசாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசை  பலப்படுத்துவதற்குத் தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்முனையை பிறப்பிடமாக கொண்ட ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஒரு சிறந்த  விஞ்ஞான ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது