அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

earthquake_logo

 

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான அலாஸ்காவின் அலேசுயன் தீவுகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆங்காராகில் இருந்து 654 கிலோ மீட்டர் தென்மேற்கிலும், சிங்னிக் ஏரியில் இருந்து 100 கிலோ மீட்டர் வடகிழக்கிலும் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருப்தபாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

ஆனால் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாக வாய்ப்பு இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. கடல் மட்டத்திற்கு கீழே 58 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அலாஸ்கா நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் நிலநடுக்க பாதிப்பு அதிகம் உள்ள இந்த அலேசுயன் வளைவானது, அலாஸ்கா வளைகுடாவில் இருந்து ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பம் வரை சுமார் 3000 கிமீ வரை நீண்டுள்ளது.