குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்குப் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே ஜனாதிபதிக்கு ஆபத்து என்று கூறினார், இதைப் போன்று பலர் தமது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டனர், இவ்வாறு வெளியிட்டவர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இது முற்றுமுழுதாக கட்சியை மையப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவோர்களை முடக்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு சதியாகவே கருதுகின்றேன் என முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இதன்போது மக்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் எனக் கூறிய அரசாங்கம் நாட்டின் சிறந்த அரசியல்வாதியும் புத்திஜீவியுமான ஜி.எல்.பீரிஸ் அவர்கள் தேசிய பாதுகாப்பு பற்றி பேசியதற்கு CID அழைத்திருக்கின்றது இதுதான் அரசாங்கத்தின் நிலை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
மேலும் முன்னாள் அரசாங்கத்தில் இருந்தவர்களை FCIDக்கு கொண்டு செல்ல முற்பட்ட இவர்கள் ஜி.எல்.பீரிஸை CIDக்காவது கொண்டு செல்லவேண்டுமென இதனை செய்திருக்கிறார்கள்.
தேசிய பாதுகாப்பு பற்றி அரசாங்கம் அலட்சியமாக இருப்பது மட்டுமல்லாது இது போன்ற விடயங்களை மறைக்கவும் பார்க்கின்றது. இதனை வைத்து முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படலாமென சந்தேகிக்க தோன்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.