ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல எனவும், நாடாளுமன்றத்தின் பொறுப்பு எனவும் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தான் நாடாளுமன்றத்துக்குப் பூரண அனுமதியை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்கவேண்டியது நாடாளுமன்றத்திலுள்ள 225 அங்கத்தவர்களின் பொறுப்பு எனவும், தான் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லையென ஏற்கனவே எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.