வடஅமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக புரட்சிகர ஆயுதப்படை என்ற அமைப்பினர் போராடி வருகிறார்கள். அவர்கள் காடுகளில் பதுக்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இவர்களை பிடிப்பதற்காக கொலம்பிய ராணுவத்தினர் 500 பேர் காட்டுக்குள் சென்றனர். அதில் ஒர்லாண்டா ஜான்சஸ் (வயது 25) என்பவரும் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவர் காட்டுக்குள் தப்பிவிட்டார். கடந்த 5–ந்தேதி இந்த சம்பவம் நடந்தது.
அவரை பல இடங்களில் தேடிவந்தனர். ஆனால் கிடைக்கவில்லை. 23 நாட்களுக்கு பிறகு இப்போது அவர் காட்டுக்குள் இருந்தை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். காட்டில் உணவு கிடைக்கால் தவித்த அவர் ஆமைகள், காட்டு வண்டுகள், தாவரவிதைகள் ஆகியவற்றை சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக கூறினார்.
இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:–
காட்டுக்குள் உணவு கிடைக்காத நேரத்தில் எப்படி எல்லாம் உயிர்பிழைக்க வழி உள்ளது என்று எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் உதவியது. காட்டுக்குள் இருந்தபோது எனக்கு எந்த உணவும் கிடைக்கவில்லை. தண்ணீரும் இல்லை.
காட்டுக்குள் ஆமைகள் கிடைத்தன. அவற்றின் இறைச்சிகளை சாப்பிட்டு ரத்தத்தை குடித்தேன். அது ஓரளவு எனக்கு பசியை போக்கியது. மேலும் கிடைத்த பொருட்களை எல்லாம் சாப்பிட்டேன். எப்படியோ உயிர்பிழைத்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.