ஹக்கீம் பொதுக்கூட்டங்களை மாத்திரம் நடாத்தி போராளிகளை உசுப்பேற்றி விட்டு சென்றுவிடுவார்

முகம்மட் ஹனீபா – அட்டாளைச்சேனை
 
ஹக்கீமின் உல்லாச பயணமும் மக்கள் அழைப்பில் ரிசாதும்
 
மு.கா தலைவர் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்திற்கு பொதுக்கூட்டம் நடத்த வரவிருக்கும் அதேவேளை 03ம்,04ம் திகதிகளில் அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் பொருட்டு அதே அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
 
2000ம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்று வரும் ரவூப் ஹக்கிம் பலம் பொருந்திய அமைச்சுப்பதவிகளை பெற்றிருந்தும் கூட பெயர் சொல்லி குறிப்பிடக்கூடிய எந்த அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொண்டதே இல்லை.
 
அம்பபாறை மாவட்டத்திற்கு தேர்தலுக்கு வந்து போகும் ஹக்கீம் பொதுக்கூட்டங்களை மாத்திரம் நடாத்தி போராளிகளை உசுப்பேற்றி சென்றுவிடுவார்.
 
rauff hakeem with rishad
 
முகா தேசிய மாநாடு என்றும் முகா மத்திய குழுக் கூட்டம் என்றும் அம்பாறைக்கு விஜயம் செய்யும் ஹக்கீம் நாளை மறுதினம் 02ம் திகதி மற்றுமொரு பொதுக்கூட்டத்தை நடாத்த அட்டாளைச் சேனைக்கு வருகை தரவுள்ளார்.
 
முகா வினால் வெந்து நொந்து போயிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். தேசியப்பட்டியலை உறுதிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பே அதுவாகும்.
 
இது ஒரு புறமிருக்க அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் 03ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் அபிவிருத்தி புரட்சி மற்றும் தொழில்வாய்பு என்ற மகுடத்தில் அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
 
இறக்காமம் தொட்டு சில முஸ்லிம் பிரதேசங்களில் சத்தோச விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதுடன் அந்த நிலையங்களில் அந்தந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு நியமனங்களையும் வழங்கவுள்ளார்.
 
இவற்றிற்கு மேலதிகமாக சில அபிவிருத்தி திட்டங்களையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
முகா வுக்கு அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்கள் கிடைத்து, அவற்றில் இருவர் பலம்பொருந்திய பிரதியமைச்சுப் பதவிகளைப் பெற்றும் கூட இந்த ஒரு வருட காலத்தில் எதுவுமே நடந்ததாக இல்லை.
நீர்வழங்கல் எனும் பலம்பொருந்திய அமைச்சைப் பெற்றுள்ள ஹக்கீம் கூட கடந்த ஒருவருட காலத்தில் அம்பாறை போராளிகளுக்குக் கூட எதுவுமே செய்யவில்லை.
 
அ.இ.ம.கா.வுக்கு அம்பாறை மாவட்டத்தில் அரசியல் ரீதியான அரசியல் பதவி எதுவுமே இல்லாத வேளையில் தான் அந்த மக்கள் அளித்த 33.000 வாக்குகளுக்கு நன்றி செலுத்தும் நோக்கியிலேயே ரிசாத் பதியுதீன் இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளார்.
 
அ.இ.ம.கா. சார்பான அம்பாறை மாவட்ட பிரதிநித்துவம் இல்லாது போன போதிலும் ஒரு பிரதியமைச்சர் அ.இ.ம.கா சார்பாக அம்பாறை மாவட்டத்தில் இருப்பாராயின் அவரால் எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க முடியுமோ அதே ஒத்த சேவையைத் தான் ரிசாத் பதீயுதீன் அம்பாறைக்கு மேற்கொண்டு வருகின்றார்.
 
எமக்கு ஒரு எம்பி இல்லயென்ற ஆதங்கம் அம்பாறை மாவட்ட அ.இ.ம.கா போராளிகளுக்கு கிஞ்சித்தேனும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ரிசாத் பதியுதீன் மிகவும் அவதானமாகவுள்ளார்.
 
அரச வர்த்தக கூட்டுத் தாபனத் தலைவர் பதவி, லக்சல நிறுவன தலைவர் பதவி, கனியவள அதிகார சபை தலைவர் பதவி என இதுகாலவரை அம்பாறை மாவட்ட மக்கள் ஹக்கீமால் கூட பெறமுடியாத பதவிகளை வழங்கி அந்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளார்.
 
அவற்றிற்கு மேலதிகமாக சீனிக்கூட்டுத்தாபன இணைப்பாளர் பதவி, தொழில்பயிற்சி அதிகார சபை பணிப்பாளர்கள் பதவி என்றும் வழங்கி அந்த மக்களை கௌரவப்படுத்தும் பட்டியல் நீண்டு செல்கின்றது.
 
இவை ஒரு புறமிருக்க அம்பாறை மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் கல்முனை ,சம்மாந்துறை, பொத்துவில் என மாவட்ட காரியாலயங்களை திறந்து, மக்களின் காலடிக்கு சென்று சேவை வழங்கும் திட்டத்தையும் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
 
இவ்வாறான நிலையில் தான் முகாவின் தேசிய மாநாடு உப்புச் சப்பில்லாமல் ஆடம்பர பணச்செலவுடன் அடிப்படை வசதியற்ற பாலமுனையில் நடந்து முடிந்தது. மாநாடு என்ற போர்வையிலாவது பாலமுனை அபிவிருத்தி காணும் என ஏங்கிய அப்பிரதேச மக்கள் இன்று நொந்து வெந்து போயிருக்கும் நிலையில் தான் மீண்டும் மக்களை உசுப்பேத்தும் ஆடம்பர வாகன பவனியுடன் இரண்டாம் திகதி ஹக்கீம் வருகை தரவுள்ளார்.
 
பொதுக்கூட்டம் மாநாடு என்று அம்பாறை மக்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஹக்கீமா சமுகத்திற்கான உரிமையையும் அபிவிருத்தியையும் பெற்றுத் தரப்போகின்றார் என்பதையும் இவ்வாறான ஒரு பொதுக்கூட்டத்தையேனும் நடத்தாமல் எம்பிப் பதவியொன்றை பெற்றுக் கொள்ள பாடுபட்டார்கள் என்ற நன்றிக்கடனுக்காக அபிவிருத்தியையும் உரிமையையும் ஒரே நேரத்தில் அம்பாறை மாவட்டத்திற்காக செய்தும் குரல் கொடுத்தும் வரும் ரிசாத் பதியுதீனா மக்கள் நலனில் அதிக கரிசனை கொண்டவர் என்பதையும் தீர்மானிக்கும் கடமைப்பாடு அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் சிந்தனைக்காக முன்வைக்க விரும்புகின்றோம்.
 
இறுதியாக ஒன்றைக் கூற விரும்புகின்றோம். ஹக்கீமின் ஏமாற்றுத் தனத்தை நம்பிய அட்டாளைச்சேனை மக்கள் அட்டாளைச்சேனையில் வைத்து ரிசாத் பதியுதீனுக்கு கல்லெறிந்தும் கூட அதனை மறந்து அட்டாளைச்சேனை ஊருக்கு முழு மன திருப்தியுடன் சத்தோச நிறுவனம் ஒன்றையும் ரிசாத் பதியுதீன் இந்த பயனத்தின் போது திறந்து வைக்கவுள்ளார்.
 
ரிசாதின் நோக்கமெல்லாம் எவரையும் பழிவாங்கக் கூடாது, துரோகமிழைத்தவர்களுக்கும் நன்மை செய்யவேண்டும், எதிராக செயற்பட்டவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாகும்