யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரின் புதிய வீட்டுக்கு அடிக்கல் நட்டிய அமைச்சர்

அஷ்ரப் ஏ சமத்
யுத்த்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளா் மதிவானனுக்கு கொடிகாமத்தில் வீடொன்றை  ஊடக அமைச்சா் அடிக்கல் நாட்டி வைத்தாா். இவ் வீட்டினை இலங்கை ருபாவாஹினி கூட்டுத்தாபணம் அனுசரனையில் நிர்மாணிக்கபடுகின்றது. அத்துடன் மேலும் லேக் ஹவுஸ், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனங்களின் அனுசரனையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளா்களுக்கு 3 வீடுகள் நிர்மாணிக்கப்டும். அடுத்த 4 மாதங்களுக்குள் யாழ் வந்து இவ் வீடுகளை திறந்து வைப்பதாக ஊடக அமைச்சா் கயந்த கருநாதிலக்க தெரிவித்தாா்.
SAMSUNG CSC
ஊடகவியலாளா் மதிவானன் தனது மனைவி யுத்த்தினால் பாதிக்கப்பட்டதையும் தான் பட்ட துண்பங்களையும் ஊடக அமைச்சரிடம் விவரித்தாா்.
கடந்த இறுதிக்கட்ட வண்னி யுத்தத்தின்போது தனது மனைவியை எடுத்துக் கொண்டு நகரும்போது  மனைவின்  களுத்தின் உள்ளாள் குண்டு பாய்ந்து  அங்கவீனமுற்றுள்ளாா்.  அவா் அப்போது  வயிற்றில் இரட்டை குழந்தைகளைக் கொண்ட கர்ப்பவதியாக இருந்தாா். அதன் பின் வயிற்றின் உள்ளே இரட்டைக் குழந்தைகளை அகற்றியே அவவுக்கு சத்திரக் சிகிச்சை மேற்கொண்டோம்.  அதன் பின்னா்   2 வருடத்திற்கு பின்பே   ஒரு குழந்தை உள்ளது.
பிராந்திய ஊடகவியலாளா்   மதிவானன் தற்பொழுது தினக்குரல் பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றுகின்றாா்.
SAMSUNG CSC