அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடாத்தாமை குறித்து இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலம் கடந்து ஓராண்டு கழிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் இன்னமும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த ஆர்வம் காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் தோல்வியடையக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடாத்துமாறு கோரி பாரியளவில் போராட்டங்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.