நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு செயற்பாட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பல்வேறு அமைச்சுளின் செயற்பாட்டுத்திறனற்ற முன்னெடுப்புகள் காரணமாக குறித்த இலக்கை இதுவரை எட்டமுடியாத நிலையில் இயங்குகின்றன.
தற்போதைக்கு வெளிநாட்டமைச்சின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக பிரதமரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் அதே வேளை, வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள் மட்டத்திலும் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே போன்று கல்வி அமைச்சின் சிற்சில நடவடிக்கைளிலும் அண்மைக்காலங்களில் பிரதமர் அலுவலகம் தலையீடு செய்திருந்தது. இதற்கு மேலதிகமாக கல்வி அமைச்சின் தேசிய மட்ட நடவடிக்கைகளை முற்றாக பிரதமர் அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதேபோன்று பொதுமக்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் இன்னொரு அமைச்சின் (சுகாதாரம்?) செயற்பாடுகளையும் பிரதமரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள பிரதமரின் சீன விஜயத்தின் பின்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இந்த வருடக் கடைசியில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடுத்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) முன்னதாக வேறு சில அமைச்சுகளையும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.