தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு !

 

Parliament-Sri-Lanka-interior

தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதி இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணசபையின் அனுமதி பெற்றுக்கொள்ளாமை உள்ளிட்ட சில காரணிகளின் அடிப்படையில் இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவது கால தாமதமானது.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் அமுல்படுத்தப்படாத ஒரே நாடாக இலங்கை திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.