பொருளாதார பின்னடைவிற்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும் : சரத் பொன்சேகா

நாட்டின் தற்போதைய பொருளாதார பின்னடைவிற்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

General-Sarath-Fonseka-colombo-telegraph

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நாட்டில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை எனவும் விழாக்களுக்கு கோடிக் கணக்கில் செலவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கடந்த ஆட்சியாளர்கள், நிர்வாகம் செய்தார்களா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 50 வீதமானவர்களின் தனிநபர் தலா வருமானம் 500 அமெரிக்க டொலர்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 வீதமானவர்களே நாட்டில் பணத்தை புழங்கியதாகவும் ஏனையவர்களிடம் பணம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரியளவில் வேலையில்லாப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகள் நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை ஒரே ஆண்டில் லாபமீட்டக்கூடிய நிறுவனமாக மாற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஜனாதிபதி ஒருவர் ஆட்சி செய்யும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் நாட்டை ஆட்சி செய்ய இடமளிக்குமாறு கோருவதனை நாம் பார்த்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றிற்கு அழுத்தம் கொடுக்கவே கூட்டம் நடத்துவதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளதாகவும் கடந்த காலங்களிலும் அவர் இதனையே செய்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.