நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைக்கான தீர்வாக சம்பூர் அனல்மின் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடிக்கடி ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
இனிவரும் காலங்களில் நாட்டில் மோசமான மின்சார நெருக்கடிய தவிர்க்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, சம்பூர் அனல் மின் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் திடீரெனச் செயற்படாமல் நின்று போனதும், மின்சார நெருக்கடிக்கு ஒரு காரணம் என்றும், இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது என்றார்.
இதேவேளை எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்கான சில பரிந்துரைகளையும், திட்டங்களையும் அமைச்சர் மன்றில் சமர்ப்பித்தார்.